சேலத்தில் பயங்கர விபத்து..!! விபத்திற்கு காரணம் யார்..?
நேற்று முன்தினம் நள்ளிரவு சேலத்தில் இருந்து 50 பயணிகளுடன், கடலூர் நோக்கி நெய்வேலிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடையை சேர்ந்த டிரைவர் வரதராஜன் (வயது 50) பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பேருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்த போது, திடீரென சென்டர் மீடியனில் மோதி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு அங்கு வந்த பொது மக்கள்.., விபத்தை பார்த்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயமடைந்த டிரைவர், மற்றும் கண்டக்டர் உட்பட 50 பேரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிகாலை ஏற்பட்ட விபத்தினால் விருத்தாசலம் – சேலம் அருகே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிஷ்டவசமாக விபத்தில் எந்த உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post