திருவண்ணாமலையில் கை குழந்தையுடன் ஆசிரியர்கள் போராட்டம்..!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக, தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 12,200 பகுதி நேரசிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டம் வாயிலாக வலியுறுத்தியும் தற்போது வரை அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளது, என குற்றம் சாட்டும் பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த தேர்தலின் போது திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக தங்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்த நிலையில் தங்களைபணி நிரந்தரம் செய்யாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலமுன்பாக கை குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கோரிக்கை களை நிறைவேற்ற வில்லை என்றால் வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
Discussion about this post