பொது மக்களை வெட்டியதாக 100அழைப்பு…. விசாரிக்க வந்த போலீசை பட்டப்பகலில் நடுத்தெருவில் கையில் கத்தியுடன் விரட்டிய கஞ்சாபிரியர்கள்… அலறி ஓடும் பூந்தமல்லி காவலரின் வீடியோ காட்சிகள் வைரல்
சென்னை காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் திருமாவளவன்(47), இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைப்பெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று வந்த போது அவரை சாலையில் வழிமறித்த கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் திருமாவளவனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என திருமாவளவன் கூறவே அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் சரமாரியாக தாக்கியதோடு, சிறிய கத்தியால் கீரி உள்ளனர் அந்த மூன்று பேர் கொண்ட கும்பல். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் பணம் கேட்டு தாக்குதலில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க முயன்ற போது கஞ்சா போதையில் இருந்த அம்மூவரில் சபரி என்பவன் சிறிய கத்தியால் கிழித்து கொண்டதோடு, காவலரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் துரத்தியுள்ளானர் ,இதனால் அதிர்ச்சியடைந்த கான்ஸ்டபிள் சரவணன் பயந்து ஓட்டம் பிடித்துள்ளார். பூவிருந்தவல்லி காவல்துறையினர் சிறிது நேரத்தில் அம்மூவரையும் பிடித்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துசென்றனர்.
விசாரித்ததில் அவர்கள் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சபரி,சந்தோஷ்,சூர்யா என்பது தெரிய வந்தது இவர்கள் கஞ்சா போதையில் அப்பகுதியில் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதும் அன்றைய தினத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதும் தெரிய வந்தது .. காவலரை தாக்க முயற்சித்தது குறித்து வழக்கு பதிவு செய்யாமல் பொதுமக்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்..
இதுக்குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காட்டுப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அன்றைய தினத்திற்கு தீ மிதி திருவிழாவிற்கு பாதுகாப்பிற்கு போலீசார் அனுப்பி வைக்கப்படாததால் ஒரு ஆட்டோ ஓட்டுனர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த் தம்பதி என இரு தரப்பினரை கஞ்சா கும்பல் தாக்கியதாகவும் காட்டுப்பாக்கம் பகுதியில் காவல் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. கஞ்சா போதையில் போலீஸ் கான்ஸ்டபிளை நோக்கி அச்சுறுத்தும் வகையில் போதை ஆசாமிகள் விரட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது…….