டாஸ்மாக் கடைகள் மூட வலியுறுத்தல்..! மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்..!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
ஒரே நாளில் நடப்பதால் விஷச்சாராய சாவுகள் பெரிதாக தெரிகின்றன, ஆனால், டாஸ்மாக் மூலம் கொஞ்சம் கொஞ்மாக தமிழ்நாட்டு மக்கள் உயிரிழந்து வருகின்றனர்; எனவே தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து முயற்சியெடுப்போம் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவும் மதுவிலக்கை அமல்படுத்தவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பீகார், குஜராத், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, லட்சத்தீவு ஆகிய இடங்களில்ரான் முழுமையான மதுவிலக்கு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் விஷச்சாராய மரணங்கள் நிகழவில்லை.
இந்தியா முழுவதும் விஷச்சாராய உயிரிழப்புகள் நடைப்பெற்றுள்ளன. ஒரே நாளில் நடப்பதால் விஷச்சாராய சாவுகள் பெரிதாக தெரிகின்றன. ஆனால், டாஸ்மாக் மூலம் கொஞ்சம் கொஞ்மாக தமிழ்நாட்டு மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
மது மக்களின் வாழ்வையும், குடும்ப பொருளாதாரத்தையும் சீரழித்து வருகிறது. பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் பொதமக்களின் வாழ்வாதாரம் உயிரிழந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடக்கும் இந்த போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் அல்ல, கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து முயற்சியெடுப்போம் எனத் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ