ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் மதிப்பெண் குறைவு..!! வேதனையில் முதலமைச்சர்..!!
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலை மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நான் முதல்வர் என்ற திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் முதல்வன் என்ற திட்டத்தில் ஆண்டுக்கு 10லட்சம் பேருக்கு திறன் பயிற்ச்சி கொடுக்கும் வகையில் சில இலக்கை நிர்ணயித்தோம் முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு கல்வி திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 445 பொறியியல் கல்லூரியில் 85,053 பொறியியல் பட்டதாரிகளில் 65,034 மாணவர்களும், 861 கலை கல்லூரிகளில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 99,230 மாணவர்களில் 83,223 மாணவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு முகாம் மூலம் 5844 பொறியியல் மாணவர்களுக்கும் 20,082 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க செய்துள்ளோம்.
ஆனால் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் மட்டும் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்துள்ளது. அது என்னை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளது. இந்த நிலையும் மாற வேண்டும்.., அதற்கான கல்வி உதவிகளை தமிழக அரசு செய்ய தயாராக உள்ளது. படித்து மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற நினைப்பது மட்டும் தான் மாணவர்களின் வேலை.
அதுமட்டுமின்றி நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் ஒரு பாகமாக மத்திய அரசு பணிகளுக்காக போட்டி தேர்வு பயிற்சி பிரிவு ஒன்றும் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் வேலைகளும் நடந்து வருகிறது என தமிழக முதல்வர் பேசியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..