தமிழ்ப் புதல்வன் திட்டம்..! 401 கோடி நிதி ஒதுக்கீடு..! தகுதியான மாணவர்கள்..?
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். மேலும் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரன்ஸ் ஹவுஸ் என்ற பணப்பட்டுவாடா முறையில் மாதந்தோறும் வங்கியில் செலுத்தப்படும் என்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.401 கோடி செலவாகும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியான மாணவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு தெரியும் வகையில், கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் மாணவர்களிடம் ஆதார் இல்லை என்றாலோ ஆதாரில் ஏதேனும் எழுத்து பிழை இருந்தாலோ.., அல்லது சான்றிதழ்களில் பெயர் திருத்தங்கள் இருந்தாலோ அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு., ஆதார் முகாம் அமைத்து சரி செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ