தேனி மாவட்டம் சுருளி அருவியில் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அம்மன் கோவில்களுக்கு விரதத்தை ஆர்வத்துடன் தொடங்கினார்கள்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது நாள்தோறும் அருவியில் புனித நீராடி இறைவழிபாடு நடத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சித்திரை மாதங்களில் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா, கம்பம் மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் மதுரை அழகர்கோவில் திருவிழா போன்ற திருவிழாக்களுக்கு விரதம் இருந்து இறைவழிபாடு நடத்துவதற்காக பக்தர்கள் சித்திரை முதல் நாளான இன்று அருவியில் புனித நீராடி தங்களது விரதத்தை தொடங்குவது வழக்கம்
சித்திரை முதல் நாளான இன்று தேனி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் சுருளி அருவிப் பகுதிக்கு வந்து புனித நீராடி கையில் காப்பு கட்டி விரத தினங்களை கடைப்பிடிப்பதற்காக புனித நீரினையும் எடுத்துச் சென்றனர்.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்ததால் அருவிப்பகுதியில் கூட்டம் அலைமோதியது.