தமிழகத்தில் இன்று(மார்ச்.07) முதல் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, டாஸ்மாக் மதுபானக்கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
ஆப் பாட்டிலுக்கு சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகள் விலை 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
இந்த விலை உயர்வு இன்று( மார்ச்.07) பகல் 12 மணிக்கு கடை திறந்தவுடன் அமலாகிறது.