தமிழகமே அன்னார்ந்து பார்க்கிறது…!! வானில் சிறகடிக்கும் சாகசங்கள்..!!
இந்திய விமானப்படையின் 92 ம் ஆண்டு விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விமான சாகச நிகழ்ச்சியானது இன்று காலை 10:30 மணிக்கு தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையின் மேல் சாகசங்கள் நடத்தப்பட்டு வருகிறது.. அதில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 72 விமானங்கள் தற்போது சாகசங்கள் நிகழ்த்தி வருகிறது.
இந்த விமான சாகசமானது கடந்த 2003ஆம் ஆண்டு நடத்தப்பட்டது அதன் பின்னர் 21 வருடங்கள் கழித்து தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வான் சாகச நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசிக்க சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர்…
ஒவ்வொரு ஆண்டும் இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டுவிழாவனது ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் கொண்டாடப்படும் ஆனால் இந்த முறை சென்னையில் கொண்டாட இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு பாரதிய வாயு சேனா என்ற தீமின் கீழ் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கொண்டாட்டங்கள் ஆற்றல், சக்தி மற்றும் சார்பின்மை ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அக்டோபர் 2 முதல் 5 வரை உத்தேச நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்படுகிறது. மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி வான்வழி சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெறும்.
இந்திய விமானப்படை அக்டோபர் 8, 1932 இல் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் நமது சென்னையில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.