தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆளுநரை நீட் தேர்வு விலக்குக்கு கட்டாயமாக கையெழுத்து போட மாட்டேன் என்று சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் வரும் 20ம் தேதி ஆளுநர் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக வருகிற 20ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ள நிலையில், ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.