தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!! விருது வழங்க காரணம் இது தான்..!!
சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழல் வலுப்படுத்துவது., தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக ஆசிய எச்ஆர்டி அவார்டு சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய எச்ஆர்டி அவார்டு நிறுவனத்தின் உரிமையாளரும் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான “டத்தோ டாக்டர் பாலன்” நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.. அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது…
இதுவரையில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை பிடல் வி பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ராமோசுக்கும், ஹாரிஸ் டால்சுவே (போஸ்னியாவின் பிரதமர்)., அடேனம் சதேம் (மலேசிய நாட்டின் பிரதமர்) உட்பட்ட தலைவர்களுக்கு மட்டுமே இதுவரையில் இந்த விருதானது வழங்கப்பட்டு வந்தது.. அவர்களை தொடர்ந்து தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்..
மனிதவள மேம்பாட்டில் அவரது பங்களிப்பு எந்த அளவிற்கு இருக்கின்றது என்பதை வைத்தே இந்த விருதானது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவன்று
உலகளாவிய ஒரு மாநாடும் நடத்தப்படவுள்ளது., இந்த மாநாட்டில் 350 மனிதவள மேம்பாட்டு நிபுணர்களும் மற்றும் தலைமை நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.. அந்த நாளிலேயே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த விருது வழங்க வேண்டுமென தேர்வு குழு ஆலோசித்துள்ளது. தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்துத்தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பல லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கபட்டுள்ளது, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முகாம்கள் அமைத்து வேலைவாய்ப்பை அளித்துள்ளனர்.. இதனால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது.
முக்கியமாக , ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காக அமேரிக்கா சென்று தமிழ்நாட்டிற்கு பிரபல தொழில் நிறுவனங்களை கொண்டு வந்துள்ளார்..
கல்வி, மனிதவள மேம்பாடு இதுதான் வறுமையை ஒழிக்கும் என்பதில் இக்குழு உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது. இந்த காரணங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது..
இதில் ஆசிய மனிதவள மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பக்ரைன் நாட்டின் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் பாமி ஜோவ்தர், இக்குழுவின் துணைத் தலைவர் மாலத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது வஹீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதை அறிந்த துணை முதலமைச்சர் உதயநிதி., தூத்துக்குடி நாடாளுமன்ற எம்.பி.கனிமொழி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..