மேடையில் கண் கலங்கிய சூர்யா..!! ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரை..!!
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக உருவாக்கியுள்ள படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியொல் நடித்துள்ளார். வரும் நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து மும்பை ஹைதராபாத் சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை பட குழுவினர் பிரம்மாண்டமாக நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று கேரளாவில் கொச்சியில் உள்ள மிகப்பெரிய மால் ஒன்றில் ரசிகர்கள் முன்னிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற.
கேரளாவில் இளம் தமிழ் நடிகர்களை பொறுத்தவரை விஜய் அஜித்துக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட அதற்கு சமமாக சூர்யாவுக்கும் தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.
கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெறும் செய்தியை கேட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த மாலின் உள்ளேயும் வெளியேயும் குவிந்தனர்.
அவர்கள் செய்த ஆரவாரத்தை கண்டு ரொம்பவே நெகிழ்ந்து போனார் சூர்யா. “இந்த அன்பை நான் எப்போதும் என் மனதில் பதிய வைத்திருப்பேன் உங்கள் அன்பு கடவுளுக்கு நிகரானது அதே சமயம் உங்கள் பாதுகாப்பு முக்கியம் மேலே உள்ள கண்ணாடி தடுப்புகளின் அருகில் நிற்கும்போது கவனமாக இருங்கள் ’’ என்று கூறினார்.
ரசிகர்களின் அன்பு கடவுளுக்கு சமமானது என சூர்யா கூறியதும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆரவாரம் எழுப்பினர்.
அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட சூர்யா அப்படியே முழந்தாழிட்டு கை கூப்பி கண்கலங்கி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..