விபத்தில் சிக்கிகொண்ட சூர்யா..!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!
சூர்யாவின் 44- வது படத்திற்கான படப்பிட்டிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது..
இந்தப் படத்தை பிரபல இயக்குனர் “கார்த்திக் சுப்புராஜ்” இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில்., சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கடந்த மாதம் வெளியானது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது. அதில் சண்டைக்காட்சியின் போது நடிகர் சூர்யாபின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது..
இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது..,
தற்போது சிகிச்சைகள் முடிந்த நிலையில் சூர்யா சென்னை திரும்பியுள்ளார். “சில நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளத்தால் சூர்யாவின் நலன் கருதி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது… இந்த செய்தி சூர்யாவின் ரசிகர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…