ரத்த தானம் செய்த சூர்யா ரசிகர்கள்.. சூர்யா செய்த செயலால் மகிழ்ச்சியின் உச்சியில்..!
சூர்யா:
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ஒருவராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நேருக்கு நேர், நந்த, காக்க காக்க , பிதாமகன் , பேரழகன், வேல் , வாரணம் ஆயிரம் , ஏழாம் அறிவு, போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று கதையம்சங்களை கொண்ட கதைகளமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இதன் டீசர்வெளியாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
சூர்யா பிறந்த நாள்:
இந்த நிலையில் நடிகர் சூர்யா வருகின்ற ஜீலை 23ஆம் தேதி தனது 49வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதன் முன்னேற்பாடக இவரது ரசிகர்கள் பல்வேறு நலதிட்டங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று அவரது ரசிகர்கள் செய்த செயலுக்கு சர்ப்ஃரைஸாக சூர்யா வீடியோ கால் மூலம் பாரட்டியுள்ளார்
ரத்த தானம் செய்த ரசிகர்கள்:
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது ரசிகர்கள் 450க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமணையில் ரத்த தானம் கொடுத்தனர்.
வீடியோகாலில் சூர்யா:
இதனை அறிந்த சூர்யா சர்ப்ஃரைஸாக ரத்த தானம் செய்த தனது ரசிகர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பாராட்டை தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”