அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம்..!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடா்பான உத்தரவை உச்சநீதிமன்றம் நாளை பிறப்பிக்க உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் எனவும், அன்றைய தினம் இடைக்கால ஜாமீன் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.