கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24 ஆம் ஆண்டு கரும்பு அருவை பருவ துவக்க விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24 ஆம் ஆண்டு கரும்பு அருவை பருவ துவக்க விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான அரவைப் பருவ துவக்க விழா பூஜை நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியா மற்றும் கரும்பு அபிவிருத்தி அலுவலர் ரமேஷ் நாராயணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் மாநில செயலாளர் முல்லை அளித்த பேட்டியில், தமிழக அரசு தேர்தலில் வாக்குறுதியின் படி கரும்பு டன்னிற்கு 4 ஆயிரம் ரூபாயை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கரும்பு கோரிகை விடுத்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.