மதராஸா இ அஸாம் பள்ளியில் மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் விசிட்..!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி அண்ணா சாலை மதராஸா இ அஸாம் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் சிறு விளையாட்டரங்கம் கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சிமையம். இப்பயிற்சி மையத்தின் கட்டட பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன்,தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப.. அவர்கள், அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
– லோகேஸ்வரி.வெ