கோவை டி.ஐ.ஜி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! 8 பேருக்கு சம்மன்..!!
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.., டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ராமநாதபுரத்தில் உள்ள டி.ஐ.ஜி விஜயகுமார் வீட்டில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
டி.ஐ.ஜி விஜயகுமார் வீட்டின் அக்கம் பக்கம் இருக்கும் சக மனிதர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து டி.ஐ.ஜி விஜயகுமார் அவரின் தற்கொலை குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணை குறித்து சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்துக்களும் தெரிவித்திருந்தனர். காவல் துறை அதிகாரிகள் டி.ஐ.ஜி தற்கொலை தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என கேட்டிருந்தார்.
காவல் துறையினரின் கருத்தை பொருட் படுத்தாத ஒரு சிலர் டி.ஐ.ஜி தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்த சமூக ஊடங்கங்களில் பேட்டி அளித்த 8 பேருக்கும் காவல் துறை சார்பில் 8 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
சம்மனை பெற்று கொண்ட “பேசு தமிழா பேசு” யூடுப் சேனல் நிறுவனர் “ராஜவேல் நாகராஜ் மற்றும் வாராஹி” என்பவரும்.., இன்று கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்தனர்.., உதவி ஆணையர் கரிகாலன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அவர்களிடம் டி.ஐ.ஜி தற்கொலை தொடர்பாக பேசப்பட்ட கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசப்பட்டது.., அதன் பின்னணி என்ன என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Discussion about this post