திருப்பத்தூரில் திடீர் சாலை மறியல்..போராட்டத்தில் இறங்கிய மக்கள்..!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கழிவு நீர் வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்யப்பப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக திருப்பத்தூர் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாமல் கழிவுநீருடன் மலை நீர் சேர்ந்து வீடுகளில் புகுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், சேலத்தில் இருந்து திருப்பத்தூர் வரும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நகர காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Discussion about this post