கொடைகானலில் திடீர் நிலப்பிளவு…!! அதிகாரிகள் சோதனை..!! பரபரப்பான கொடைக்கானல்..!!
கொடைக்கானலில் கீழ்கிளா வரை செருப்பன் ஓடை பகுதியில் நிலபிளவு ஏற்பட்டது குறித்து வருவாய் துறையினர், புவியியல் தொழில் நுட்ப உதவி இயக்குநர், காவல் துறையினர், வனத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகவல்கள் சேகரித்துள்ளதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் உள்ள கடைசி கிராமம் கிளாவரை என்ற கிராமம். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் கீழ்கிளாவரை பகுதிக்கு செருப்பன் ஓடை என்ற இடத்திலிருந்து தண்ணீர் வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என்பதால் கீழ்கிளாவரை பகுதியிலிருந்து சிலர் வனப்பகுதிக்குள் நடந்து சென்று உள்ளனர். அப்போது கூனிபட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நிலத்திற்கு மேல் நிலம் தனியாக பிளந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
நிலம்பிளந்து இருந்தாலும் நிலப்பிளவின் ஆழம் தெரியாமல் இருப்பதால் அதிர்ச்சி கண்டுள்ளனர் இந்தக் கூனிப்பட்டி என்ற இடத்திலிருந்து கேரளா வனப்பகுதி மிகவும் நெருக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நில அதிர்வு ஏதும் ஏற்பட்டுள்ளதா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்ததை தொடர்ந்து இன்று வருவாய்துறையினர், வனத்துறையினர், புவியியல் தொழில் நுட்ப உதவி இயக்குநர், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து நிலபிளவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் எடுத்துள்ளதாகவும் , இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..