அறந்தாங்கி நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…!
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்
இந்த மக்கள் பயன்படுத்தும் குப்பைகள் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள கலவை உரக்கடங்கில் சேகரிக்கப்படுகிறது
இந்த கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரங்களாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது சமீப காலமாக குப்பை தரம் பிரிக்கும் பணிகள் செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லாததால் குப்பை மலை போல் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறந்தாங்கி நகராட்சி கலவை உரக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்ததால் தீ மற்ற பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்க்கப்பட்டது
இந்த நிலையில் இன்று அறந்தாங்கி நகராட்சி கலவை உரக்கடங்கில் திடீரென தீ பற்றியது தீப்பற்றிய தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்
மேலும் தீ விபத்து குறித்து அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்
அறந்தாங்கி தீயணைப்பு வாகனம் பழுதடைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய வகை வாகனம் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
நகராட்சி கலவை உரக்கடங்கு அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது . தற்போது கலவை உரக்கடங்கில் பற்றிய தீ கொழுந்து விட்டு எறிவதால் தீ பெட்ரோல் பங்க் பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது
எனவே கூடுதல் தீயணைப்பு வாகனங்களை அழைக்க தீயணைப்பு துறையினர் நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..