100க்கு 100 எடுத்த மாணவர்கள்..? எந்த மாவட்டத்தில் யார் முதல் இடம்..?
கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை +2 பொது தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
அதில் 4 லட்சத்து 08ஆயிரத்து 440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் 3 ஆயிரத்து 750 மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வு எழுதியுள்ளனர். அதில் தேர்வு எழுதியதில் 96% சதவிகிதம் பேர் வெற்றி பெற்றனர்.
இதில் தேர்ச்சி சதவீதம் 94.56 ஆக உள்ளது. அதாவது 7,19,196 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், மாணவிகள் 96.44 சதவீதம் அதாவது மூன்று லட்சத்து 93 ஆயிரத்து 890 பேரும், மாணவர்களில் 92.37% அதாவது 3லட்சத்து 25ஆயிரத்து 35 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட 4.07 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பொதுத் தேர்வை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த பாடத்தில் எத்தனை சதவிகிதம் :
அறிவியல் பாடப் பிரிவில் 96.35% சதவிகித பேரும் வணிகவியல் பிரிவில் 92.4 சதவீதமும் கலை பிரிவில் 85.67% தொழில் பாட பிரிவுகளில் 85 85 சதவீதமும் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
இயற்பியலில் 98.48 சதவீதமும், வேதியலில் 99.14 சதவீதமும், உயிரியலில் 99.95%, கணிதத்தில் 98.57 சதவீதமும், தாவரவியல் 98.86 சதவீதமும், விலங்கியலில் 99.4 சதவீதமும், கணினி அறிவியலில் 99.80 சதவீதமும், வணிகவியலில் 97.07 சதவீதமும், கணக்குப்பதிவியலில் 96.61% பெற்றுள்ளனர்.
பாட வாரியாக தமிழ் மொழியில் 35 மாணவர்கள், ஆங்கிலத்தில் 7, இயற்பியலில் 633, வேதியல் 471, உயிரியல் 652, கணிதம் 2587, தாவரவியல் 90, விலங்கியல் 382, கணினி அறிவியல் 1996, வணிகவியல் 6142 , கணக்குப்பதிவியல் 1647, பொருளியல் 369, கணினி பயன்பாடுகள் 251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் 210 என மொத்தம் 26,3052 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக 97.45 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி மகாலக்ஷ்மி 598/600 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல் சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் சேர்ந்த மாணவிகள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளன.
இதைத்தொர்ந்து 97.75 சதவீதத்துடன் அரியலூர், 96.97% பெற்று கோவை, 96.44 சதவீத தேர்ச்சி பெற்ற நெல்லை பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
அதேபோல் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரை 469/600 எடுத்து தேர்ச்சி பெற்றுளான்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவி நிவேதா 489/600 எடுத்து வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் திருநங்கையர் என்பது திருநங்கையர் மாணவர்களில் இவர் தான் முதல் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.