வயநாடு மக்களுக்கு உதவி கரம் நீட்டிய மாணவர்கள்..!!
தமிழக வெற்றிக் கழகம் கொடி கம்பம் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ரசிகர்கள் ஏற்றி கொண்டாடி வந்தனர். இந்நிலையில் சூசையாபுரம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க மாநகராட்சி இடம் அனுமதி பெற்ற நிலையில் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என்பதால் கொடி கம்பத்தை அகற்ற அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை ரசிகர்கள் தாங்களாகவே அகற்றி சென்றனர். கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சி மகா பெரியவா கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா :
மதுரையில் அனுஷத்தின் அணுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் எஸ்எஸ் காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது இதை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். கோவிலுக்கு வந்த அத்தனை கிருஷ்ணர் ராதைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். இதை தொடர்ந்து கிருஷ்ணர் ராதை சிலை மற்றும் ஸ்ரீ மகா பெரியவர் சிலை வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் குட்டி கிருஷ்ணர் ராதைகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்தனர்.
திருப்பூர் பனியன் கம்பெனி தீ விபத்து :
திருப்பூரை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் அதிகாலை 4 மணி அளவில் ஒரு பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட அப் பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் துணிகள் தீயில் ஏறிந்து சேதம் அடைந்தது இதனிடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அதிகாலை நேரம் என்பதால் நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லை அதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது
துலுக்கானத்தம்மன் தீமிதி திருவிழா :
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம் பேடு காலனி அருள்மிகு ஸ்ரீ மாரி துலுக்கானத்தம்மன் ஆலயத்தின் 26 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா அம்மனின் பெயருக்கு ஏற்ப மழையுடன் தொடங்கியது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அன்னதானம் குடம் புறப்பாடு மற்றும் கத்தி அலகு பானை புறப்பாடு அம்மனுக்கு சாத்துப்படி செய்து குமார மக்கள் புறப்பட்டு அம்மனின் திருத்தருடன் அழைத்து வரப்பட்டனர். ஆலயத்திலிருந்து அம்மன் புறப்படும் போது சரியாக மழை பெய்த சம்பவம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. பின்பு ஆலயம் முன்பு இடப்பட்டு இருந்த தீகுண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வயநாடு மக்களுக்கு உதவிய மாணவர்கள் :
மயிலாடுதுறையை அடுத்த மேலையூர் கிராமத்தில் அழகு ஜோதி அகாடமி என்ற தனியார் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியேற்றி தொடக்கி வைத்தார். விழாவில், மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் உச்சத்தை தொட வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில், ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கேற்று பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர் வீராங்கனைகளின் உருவப் பதாகைகள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் தேசியக் கொடியுடன் நின்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை நிகழ்த்தினர். இந்நிகழ்வில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து வழங்கிய நிவாரண பொருட்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..