பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்..! ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற வாய்ப்பு கொடுக்கும் தமிழக அரசு..!!
அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு திட்டம் நேற்று மதியம் 3 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளியில் இயங்கிவரும்.., பள்ளி மேலாண்மை குழு மறுசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது, அதன் பெயரில் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்களை கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் கூட்டம் நேற்று மாலை 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற்றுள்ளது. அதில் பள்ளி செல்லாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்களை கணக்கெடுப்பின் மூலம் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள், மற்றும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனை கூட்டம் என பல விஷயங்கள் குறித்து விவாதிகப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள்.., எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிப்பை தொடரலாம்.., 12 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் பாலிடெக்னீக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்.
மாணவர்களுக்கான சலுகை :
ஐ.ஐ.டி , டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு உள்நாடு மாற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் துறைகளில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி தமிழக அரசு ஐ.ஐ.டி யில் படிக்கும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது ,
மாணவர்களை ஊக்கு வீக்கம் வகையில் லேப்டாப், சைக்கிள் மற்றும் பாட புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
மாதந்தோறும் 750 ரூபாய் உதவித் தொகையாக கிடைக்கும் என்றும் நேற்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.
Discussion about this post