வியாழன் கிழமை சாய்பாபா வழிபாடு..!!
நடமாடும் தெய்வமாக திகழும் சாய்பாபா அற்புதங்கள் நிகழ்த்தும் மகான் என்று போற்றப்படுவார்.
ஷீர்டி என்ற கிராமத்தில் மகானாய் இருந்த அவர்..,அங்கு இருந்த மக்களின் குறைகளை தீர்த்து பல அற்புதங்களை நிகழ்த்தினர்.., ஷீர்டி என்ற கிராமம் தற்போது புண்ணிய பூமியாக மாறியது.
பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் கூட்டம் “சாய் பாபா” விற்கு உண்டு. “சாய்பாபா” வின் முழு அருளும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
இந்த வழிபாட்டை செய்து பாருங்க.., பாபாவின் முழு அருளும் கிடைக்கும்.
* சாய் பாபா விற்கு விரதம் இருக்கும் பொழுது அசைவ உணவு சாப்பிட கூடாது.
* வீட்டில் சாய்பாபா வின் புகைப்படம் மற்றும் சிலை வைத்து வழிபடும் பக்தர்கள்.., வீட்டில் அவருக்கு என்று தனி இடம் வைக்க வேண்டும்.
* அசைவ உணவு சாப்பிட்டு விட்டு அவரை வணங்க கூடாது.
* வாரம்தோறும் வியாழன் கிழமை அன்று பாபா விற்கு சங்கில் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.
* இதனால் நாம் செய்த பாவங்கள்.., நீங்கி விடும்.
* பாபாவை வணங்கும் பொழுது “ஓம் சாய் நமோ நமக, ஸ்ரீ சாய் நமோ நமக, ஜெய் சாய் நமோ நமக, சத்குரு சாய் நமோ நமக.., என்ற மந்திரத்தை சொல்லி வழிபடும் பொழுது மனதில் உள்ள குறைகள் குறைந்து விடும்.
* சாய்பாபா வை வழிபடும் பக்தர்கள்.., அவர்களின் குழந்தைக்கு “சாய் ” என்று தொடங்கும் பெயரில் பெயர் வைத்தால்.., குழந்தை நோய் இன்றி இருக்கும் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மிக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post