இன்ஸ்டா ரீல்ஸ்காக மாணவன் செய்த செயல் ..!! கோரிக்கை வைத்த பொது மக்கள்..!
பேருந்து படியில் தொங்கிக்கொண்டு சாகச பயணம், போக்குவரத்தை நிறுத்தி சாலைபைக்சாகசம். –அதிகரித்து வரும் மாணவர்களின் ஒழுக்கக்கேடு – பெற்றோர்கள் சமூக அலுவலர்கள் வேதனை.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் உள்ள திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை அரசு பேருந்து முன் நிறுத்தி, அதன் எதிரே இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வரும் அளவு வாகனத்தை இயக்கி வித்தை காட்டி இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது இந்த அனைத்து பதிவுகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்து குறைவான பயணிகளுடன் செல்லும் நிலையில் செங்கம் பகுதியில் இருந்து பள்ளிப்பட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன் படிக்கட்டில் தொங்கியவாறு சாகச பயணம் மேற்கொண்டதை கண்டித்த பேருந்தின் நடத்துனரை மாணவன் மிரட்டுவதும், அவருடைய அறிவுரையை கேட்காமல் தொடர்ந்து பயணிக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இப்படி கல்வியின் மீது அக்கறை செலுத்துவதை விட்டு பேருந்தில் ஆபத்தை உணராமல் சாகச பயணம் மேற்கொள்வதும் தட்டிக் கேட்கும் நடத்துனரை மிரட்டுவதும், சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக போக்குவரத்தை நிறுத்தி பொது இடத்தில் அராஜகமாக இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபடும் சம்பவங்களும், மாணவர்களிடையே ஒழுக்கக்கேடு அதிகரித்து வருவதைகாட்டுவதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
கல்வி மற்றும் விபத்து குறித்து அக்கறை கொள்ளாமல் மனம் போன போக்கில் செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்த பள்ளிக் கல்வித்துறையும் காவல் துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Discussion about this post