சட்டப்பேரவையில் பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் சுந்தர், வாலாஜாபாத் அருகே புதிய கலை அறிவியல் கல்லூரியில் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்த்து அவர் பேசும்போது வாலாஜாபாத் சுற்றுப்புற பகுதிகளில் அதிகமான அரசு பள்ளிகள் இருக்கும் நிலையில் இங்கிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளியே வருகிறார்கள். இவர்களுக்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, உத்திரமேரூர் தொகுதியில் மூன்று கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் புதிதாக 31 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் பதிலளித்தார்
Discussion about this post