ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை..!! பள்ளிக்கல்விதுறை அதிரடி..!! தலைமை ஆசிரியருக்கு வந்த சிக்கல்..!!
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பிற்போக்குத்தனமான சொற்பொழிவு ஆற்ற அனுமதி அளித்த தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்…
கடந்த வாரம் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் “தன்னை உணர்ந்த தருணம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது.., அதில் பேச்சாளராக வருகை தந்த “பரம்பொருள் அறக்கட்டளையின் குழுவில் இருந்து வந்த மகா விஷ்ணு., போன ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் மற்றும் தவறுகளாலேயே இந்த ஜென்மத்தில் ஊனமுற்றவர்களால் பிறகிறார்கள் என ஆன்மீகம் குறித்து பேசியுள்ளார்.. அவரின் அந்த சொல்லுக்கு பல கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்தது..
அதேபோல் சைதப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியிலும் இதேப்போல் ஆன்மிகம் கலந்த சொற்பொழிவு பேசியதாக சொல்லப்படுகிறது.. பள்ளியில் ஆன்மீகம் கலந்த சொற்பொழிவை பற்றி பேச அனுமதி அளித்தது ஏன் என்பது பற்றி கேள்வி எழத்தொடங்கியது..
இந்நிலையில் அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசியை., பிற்போக்குத்தனமான சொற்பொழிவு ஆற்ற அனுமதி அளித்த காரணத்திற்காக அவர் பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டம், அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையசிரியராக பணிபுரிந்து வரும் ஆர்.தமிழரசி மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் ஜாதி இனம் மதம் மறந்து படிக்கும் இடத்தில் ஆன்மீகம் குறித்து பேச அழைத்தற்காக திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்படுவதாக ஆணையிட்டுள்ளார்..”
மேலும் தலைமை ஆசிரியர் பணிவிடுப்பு செய்யும்போது அவர் பணிபுரியும் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகள் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படி சென்னை முதன்மைக் கல்வி அலுவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.