கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை…
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குமர முருகன் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் கிருத்திகையை. முன்னிட்டு மூலவர் குமர முருகன்,உற்சவ மூர்த்தியான சுப்பிரமணி வள்ளி தேவசேனா சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
மேலும் உற்சவ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடையத்தால் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
இதில் 10 க்கும் மேற்ப்பட்ட கிராம பொதுமக்கள் கலந்தது கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள்அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.
-பவானிகார்த்திக்