குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவிyai சந்தித்து 40 நிமிடம் அது தொடர்பாக பேசியதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி ஆனந்த்
தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி எனக்கு நடந்தது குழந்தை திருமணம், திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்கள் சந்தித்த அவர், குழந்தைகள் திருமணம் தொடர்பாக ஆதரித்து பேசிய ஆளுநரிடம் 40 நிமிடம் அவரை சந்தித்து விளக்கம் கேட்டறிந்திருப்பதாகவும்.
அது தொடர்பாக நாளை சிதம்பரம் சென்று தீட்சிதர்களை சந்தித்தும் விளக்கம் கேட்ட பின் ஆளுநர் கூறியது தொடர்பாக விரிவான விளக்கம் செய்தியாளர்கள் சந்தித்து கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாணவி மற்றும் திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணை முடிவில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களான தமிழ்நாடு ,ஆந்திரா கேரளா ,கர்நாடகா,இவைகள் உள்ள 21 கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு செய்ததில்.
அதில் சில கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களுக்கு ஜாமீன் கிடைக்காததாலும் சிறுவருக்குள்ளே ஏற்படும் கேங் மோதலாலும் தப்பித்து விடுவதாக ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும்.
தமிழ்நாட்டில் கூர்நோக்கு இல்லங்களில் குழந்தைகளை அடிப்பதோ துன்புறுத்துவதோ எந்த ஒரு புகாரம். வந்ததில்லை என்றும் அவர் கூறினார்.
குழந்தைகள் விளம்பரத்தில் நடிப்பது தொடர்பாக குழந்தைகள் எவ்வளவு மணி நேரம் பள்ளிக்கு போகலாம் விளம்பரத்தை நடிக்கலாம் என்பது குறித்து ஆணையம் அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும்.
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக நிறைய மாற்றங்கள் அரசு செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் தப்பித்துச் செல்வது குறித்து ஆய்வு செய்ததாகவும், அத்தகைய கூர்நோக்கு மையத்தில் ஆய்வு செய்ததில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் போக்கக்கூடிய மாத்திரைகள் தன்மை எவ்வளவு அளவு அளிக்கப்படுகிறது என்பது குறித்தும்
கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் சிறுவர்கள் தப்பி செல்வதை தவிர்க்கும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்கள்
வீட்டிற்கு சென்று வருவதற்கும் ஆணையத்திற்கு கடிதம் பெறப்பட்டிருப்பதாகவும், ஆணையும் ஆலோசித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறினார்.
கங்காரு தாய் பராமரிப்பில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Discussion about this post