தமிழில் ப்ரண்ட்ஸ், காவலன் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சித்திக் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் 1986ம் ஆண்டு ஜி ரஹ்மான், மோஹன்லால், திலகன், லிசி, பகதூர், உன்னிமேரி,ராஜன், தேவ், பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் தான் “பாப்பான் ப்ரியப்பேட்ட பாப்பன்” இந்த படத்தின் மூலம் இயக்குனர் சித்திக் புகழ் பெற்றார். இந்நிலையில் புதிய மலையாள பட இயக்க இருந்த சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 69.
இயக்குனர் சித்திக் மரணத்திற்கு இரண்டு திரையுலகங்களும் தங்களது ஆழ்ந்த் இரங்கலைத் தெரிவித்து வருகிறது.