அப்போ விஷால் இனி படத்துல நடிக்க மாட்டாரா..?
நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக நடிகர் விஷால் உச்சநீதி மன்றத்தில் ஆஜராகி பதில் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் பைனான்சியர் அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனடத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளனர். அந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுகொண்டுள்ளது.
அந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை லைகா நிறுவனத்திற்கு அவரின் படத்தின் உரிமைகளை கொடுத்துள்ளார், தற்போது விதிகளை மீறி.., “வீரமே வாகை சூடும்” என்ற படத்தில் நடித்துள்ளார்..
ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதால் லைகா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, லைகா நிறுவனத்திற்கு 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், விஷால் பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கிளோ அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்துள்ளது.
இதற்கும் விஷால் ஒத்துழைக்க வில்லை என்றால்.., நீதிபதி அடுத்தகட்ட தண்டனையை கொடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post