”ப்ரீ புங்கிங்கில் மட்டும் இவ்வளவு கோடியா”.. ராயன் படைத்த சாதனை..!
நடிப்பதில் மட்டுமின்றி, திரைப்படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் கொண்ட தனுஷ், தனது 50-வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிருவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், துசாரா விச்சயன், அபர்ணா பாலமுரளி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகி உள்ளது.
படம் வட சென்னை பானியில் கேங்ஸ்டர் கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்த்து படத்தின் மீதான எதிர் பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. வருகிற (ஜூலை) 26ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருப்பதையொட்டி, இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடர்பான தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, இப்படம் ரிலீஸ்-க்கு முன்னதாகவே, ரூபாய் 2.1 கோடியை ப்ரீ புக்கிங்கில் வசூலித்துள்ளது. இது ராயன் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் என்று சொல்லப்படுகிறது.
ப்ரீ புங்கிங்கிலே இவ்வளவு வசூல் செய்த ராயன் ரிலீஸ்க்கு பின்னர் எவ்வளவு கோடியை வசூல் சாதனை புரியும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
-பவானி கார்த்திக்