மின்கட்டணம் உயர்வு ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
சென்னையில் மின்சார கட்டணம் உயர்வு குறித்து தண்டையார்பேட்டையில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது குறித்தும்.., ரேஷன் பொருட்களை படிபடியாக நிறுத்த்துவது குறித்து சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர்கள் எம்.என். சீனிவாசபாலாஜி, ஆர், நித்தியானந்தம், பெரம்பூர் பகுதி கழக செயலாளர்கள் டி.ஒய்கே.செந்தில்குமார், என்.எம் பாஸ்கரன், மணல் ரவிசந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், கருப்பு சட்டை, பெண்கள் கருப்பு புடவை, அணிந்து மாட்டுவண்டியை தற்காலிக மேடையமைத்து நாரதர் – கிருஷ்ணர் வேடமணிந்து கலாகாசேப நாடகம் நடத்தப்பட்டது. மேலும் மின் கட்டண உயர்வை வலியுறுத்தி மகளிரணியை சேர்ந்த 50 பெண்கள் பங்கேற்று ராந்தல், மற்றும் சிம்லி, பெட்ரோமாக்ஸ் விளக்குடன் மின்சாரம் இல்லாமல் கற்காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை வலியுறுத்தி மிளகாய், தனியா, இஞ்சி பூண்டு, அரிசி, பருப்பு மாவு, கேழ்வரகு அம்மி, உரலில் அரைப்பது போன்ற நூதன நூதன முறையில் 1000 – க்கும் மேற்பட்டோர் கையில் கண்டன பதாகைகளுடன் கட்சி கொடியை ஏந்தி ” ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்றும் ஆர்.கே.நகர் பெரம்பூர் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர், அண்ணா தொழிற்சங்கத்தினர், மீனவரணியினர், பொதுமக்கள், உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..