சிவகார்த்திகேயனை வறுதெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!!
இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டு குறித்து ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனை கலாய்த்து இருக்கிறார்..
இசையமைப்பாளர் டி.இமான் பிரபல இசையமைப்பாளர் இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுக்கும்.., அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனின் படங்களான மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், சீமராஜா, நம்ப வீட்டு பிள்ளை போன்ற படங்களுக்கு இசையமைத்து உள்ளார்..
குற்றம் :
கடந்த சில வருடங்களாகவே இவர்களின் காம்போவில் எந்த படங்களும் வெளிவராத நிலையில் சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ளார்..
சிவகார்த்திகேயன் எனக்கு மிக பெரிய துரோகத்தை செய்துவிட்டார்.., அவர் செய்த அந்த துரோகத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்கமாட்டேன். இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் படம் எதற்கும் நான் இசையமைத்து கொடுக்க மாட்டேன் என பேசியிருந்தார்..
இமான் மோனிகாவின் பிரிவிற்கு சிவகார்த்திகேயன் தான் என பலரும் பேச தொடங்கிய போது மோனிகா.., எங்களின் இந்த பிரிவிற்கு சிவகார்த்திகேயன் காரணமில்லை இமான் எடுத்த அந்த விவாகரத்து முடிவிற்கு சிவகார்த்திகேயன் ஆதரவு கொடுக்காததால் இதற்கு சிவகார்த்திகேயன் காரணம் என இமான் சொல்லுவது முற்றிலும் தவறு..
இதுபற்றி சிவகார்த்திகேயன் எதுவும் பேசாமல் மெளனம் தெரிவிப்பது ஏன் என தெரியவில்லை.., அதேசமையம் இந்த வீடியோ வெளியான பின் சிவகார்த்திகேயன் கால் செய்து அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி கேட்டதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது..
ப்ளூ சட்டை மாறன் ட்விட் :
இதுபற்றி ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் இணையதளம் பக்கத்தில் “பேட்டியை நீக்க சொல்லி கெஞ்சும் மாவீரன்” எந்த பருப்பும் வேகாமல் 1மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வாவு டமிழா உச்சம்.., இது குடும்பங்கள் கொண்டாடும் என்ன சொல்லுறது தெரியல இது இளவரசனுக்கு வந்த மிக பெரிய சோதனை என பதிவிட்டுள்ளார்..