தமிழ் திரையுலகில் சிறிது காலமாக படத் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய பட தலைப்புக்களை தங்கள் படத்திற்க்கு வேண்டும் என பல இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில், பழைய தலைப்புகளை வைப்பதில் சில வரைமுறைகள் உள்ளது. அதன்படி, பிரபலமான காதாநாயகன் நடித்த பழைய படத்தில் தலைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த காதாநாயகனிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.
இதனையடுத்து, தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ரஜினி நடித்த படத்தின் தலைப்புகளை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால், அந்த படம் பெரிய ஹிட் குடுத்த படமாக இருக்கும். அதனால் அந்த படத்தின் பெயர் கெட்டுவிட கூடாது என தலைப்புகளை கேட்க அணைத்து இயக்குனர்களும் தயங்குவார்கள்.
ஆனால், நடிகர் தனுஷ் ரஜினிக்கு மருமகன் என்பதால் இது போல இவர்களுக்கு இடையில் தயக்கம் இல்லை. முதன் முதலாக பொல்லாதவன் என ரஜினி சூப்பர் ஹிட் பட தலைப்பை நடிகர் தனூஷ் எடுத்துக்கொண்டார். பின்னர் படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற ரஜினி நடித்தி ஹிட் கொடுத்த படங்களின் தலைப்புகளை தொடர்ந்து தனுஷ் எடுத்துக்கொண்டார். இவர் ரஜினியிடம் இருந்து எடுத்துக் கொண்ட தலைப்புகள் தனுஷுக்கு ஹிட் கொடுத்தது.
இதனிடையே, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், ரஜினிகாந்த் நடித்த ‘மாவீரன்’ படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான “டான்” திரைப்படம் 1 வாரம் கடந்து திரையரங்குகளில் கூட்டம் கலை கட்டிய நிலையில், இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ரஜினி பட தலைப்பை உபயோகப்படுத்தும் முழு உரிமை தனுஷ்க்கு இருந்து வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ரஜினி படத்தின் தலைப்பை வைத்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.