சீதளாதேவி பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி; உற்சாகத்தில் பக்தர்கள்..!!
மயிலாடுதுறை மாவட்டம் மாமகுடி கிராமத்தில் சீதளாதேவி பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மே 10ம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது. தொடக்க நாளிலேயே பக்தர்கள் தீமிதிக்காக காப்புக்கட்டி விரதம் இருந்துள்ளனர்.
விழா தொடங்கிய நாளில் இருந்தே.., தினமும் ஒரு பூஜை அம்மனுக்கு நடைபெற்றுள்ளது. தினமும் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் விழாக்குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு கோவிலுக்கு அருகேயுள்ள மைதானத்தில் தீமிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காப்புக்கட்டிய அனைத்து பக்கதர்களும் தீமிதியில் இறங்கினார்கள். நேற்று இரவு தீமிதியை தொடர்ந்து இன்று காலை, திருவிழா நிறைவடைந்தது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.