5 வயதில் உலக சாதனை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சிறுவன் சித்தார்த்..!!
சாதனை என்பது எந்த வயதிலும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக 5 வயதிலேயே உலக சாதனை செய்து இந்தியாவிற்கு பெருமை பட வைக்கும் வகையில் பல சாதனைகள் செய்துள்ளான் மாணவன் சித்தார்த்.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்த யோகராஜ் மற்றும் பிரியா தம்பதியினர் அவர்களுக்கு சித்தார்த் என்ற 5 வயது மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சித்தார்த் என்ற சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான்.
சிறுவன் சித்தார்த் இரண்டரை வயதில் இருந்தே யோகா, சிலம்பம், வில் வித்தை, டேக்வாண்டோ, பாக்சிங் போன்ற பல கலைகள் கற்றுக் கொண்டுள்ளான். கற்று கொண்டால் மட்டும் போதும் அதில் எதாவது சாதனை செய்து ஆக வேண்டும் என்ற இலக்கோடு செய்த செயல் தான் சித்தார்த்தின் சாதனை.
3 வயதில் இருந்தே சிறுவன் சித்தார்த் 3 நோபல் உலக சாதனைகள் செய்து, கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான். 3 வயதில் சித்தார்த் முட்டையின் மேல் ஏறி நின்று சமகோன ஆசனமும். 25 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து யோக ஆசனமும் செய்து கும்பூவில் தொடர்ந்து ஒரு நிமிடம் பரிச்சசும், 4 வயதில் தொடர்ந்து ஒரு நிமிடம் 26 முறை சிங்கிள் ஹாண்ட் கார்ட் வீலர் செய்து பல சாதனைகளை செய்துள்ளான்.
இதுவரை இந்த சிறுவன் வாங்கிய பட்டமும்.., மெடலும் மட்டும் 30க்கும் மேல் உள்ளன. தற்போது 5 வயதில் தாய்லந்தில் நடந்த உலக அளவியல் யோகா போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை செய்து இந்திய வீரர் என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
நம் மதிமுகம் சார்பாக இந்திய வீரர் சித்தாத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வோம்.
Discussion about this post