திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் இந்திய அளவில் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகவும் தமிழகத்தில் முதன்மையான திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகக் கோவில் கிழக்கு வாசலில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அதன் காரணமாக கட்டிடப் பராமரிப்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இந்த வேளையில் தான் ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று அதிகாலை 1.50 மணியளவில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு வாயிலின் கோபுரத்தின் முதல்நிலை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
Discussion about this post