ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி..! முடக்கப்பட்ட சொத்துக்கள்..! 21 பேருக்கு..?
கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கொலை வழக்கில் சம்மந்தபட்ட 11 உட்பட பாஜக நிர்வாகி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதில் திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது என்கவுண்டரில் சுடப்பட்டார்..
அதையடுத்து மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆர்ம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களிடமும் விசாரணை செய்த தனிப்படை போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல ரவுடி சேகரின் மனைவி மலர்கொடி இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்து. அவருக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் ஹரிகரன், சதீஷ்குமார், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான வட சென்னை அஞ்சலை, திருவள்ளூர் மாவட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிதரன் ஆகியோரை செம்பியம் தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின், சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தது கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், முகிலன், மற்றும் விக்னேஷ் என்பது தெரியவந்தது.., அதன் பேரில் அவர்களை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்த கும்பலுக்கு சம்போ செந்தில் என்பவர் பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. பணப்பரிவர்தனை, நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 நபர்களை கைது செய்து அவர்களிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்காக பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம், அதன் மூலம் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை ஆய்வு செய்து கணக்கிட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளது விசாரணையில் வெளிவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து பல்வேறு குற்றவாளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில்., கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..