“தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள்” – சமந்தா கோரிக்கை..!
மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு இயக்குநர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை அளிப்பதாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை விவரங்கள் வெளியானது.இது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாமாக முன்வந்து தங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கூறிவருகின்றனர். முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் மலையாள திரைப்பட சங்கம் ஒட்டு மொத்தமாக கலைக்கப்பட்டது.
இந்தசூழலில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்த அறிக்கையை அரசும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அதில், கேரளாவில் wcc என்ற அமைப்பின் செயல்பாடுகளை தாம் வரவேற்பதாகவும், கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில், துணை அமைப்பாக தி வாய்ஸ் ஆஃப் உமன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
கேரளாவைப் போலவே தெலங்கானா அரசும், பாலியல் அத்துமீறல் குறித்த தி வாய்ஸ் ஆஃப் உமன் அமைப்பின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார்.
-பவானி கார்த்திக்