மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டால் நிறைய நன்மைகள் நடக்கும். நினைத்ததை வெளியே சொல்லாமல், தேவையானதை அடுத்தவர்களிடம் வாய்விட்டு கேட்காமல் இருந்தால், சில நல்ல வாய்ப்புகளைத் தவிர விட வாய்ப்பு உள்ளது. ஆகவே கூச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு போல்டா இன்னிக்கு எல்லா வேலையும் செய்யுங்கள். வெற்றி நிச்சயம். நீங்கள் வாய்விட்டு கேட்டதை விட இரண்டு மடங்கு நன்மைகள் கூடுதலாக கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு உங்களை திக்கும்கு ஆட செய்யும். வீண் செலவை குறைக்கவும், சேமிப்பை அதிகப்படுத்தவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்வார்கள். வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். மன நிம்மதியை பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு டென்ஷன் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். எல்லா வேலையிலும் ஒரு பதட்டம் இருக்கும். காலையில் எழுந்தவுடன் மனதை அமைதி படுத்த ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நன்மை தரும். மற்றபடி முக்கியமான முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெரியவர்களின் ஆலோசனை என்ன என்பதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவர்கள் நட்பு வேண்டாம். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை வைக்காதீங்க.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நன்மை தரக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாள் விற்காத சொத்து விற்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல லாபத்தோடு பேச்சு வார்த்தை முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கலைஞர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு செல்வாக்கு கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். திறமை வெளிப்படக்கூடிய நாள். உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். சுப செலவுகள் ஏற்படும். கையில் இருக்கும் காசு பணம் செலவாக கொஞ்சம் வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது அலட்சியம் வேண்டாம். கவனமாக இருக்கவும். ஹெல்மெட் அணிந்து செல்லவும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அவசரப்பட்டு எந்த விஷயத்தையும் பேசக்கூடாது. நாலு பேர் சேர்ந்து இருக்கும் சபையில் நீங்கள் பேசக் கூடிய விஷயம் தவறாக போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே வார்த்தையில் கவனம் தேவை. எதுவாக இருந்தாலும் நன்றாக புரிந்துவிட்டு பிறகு பதில் பேசவும். புதிய எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்காதீங்க. நேர்மறை கண்ணோட்டம் இன்று நிறைவான மன நிறைவு கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனசு கொஞ்சம் குழப்பமாக இருக்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்காது. முக்கியமான முடிகளை நாளை தள்ளிப் போடுங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்லவும். சொந்த தொழிலில் கூடுமானவரை எல்லா கணக்கு வழக்குகளையும் நீங்களே பாருங்க. அடுத்தவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீங்க.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சாதனை படைக்க கூட வாய்ப்புகள் உள்ளது. யாராலும் முடியாத வேலையை நீங்கள் செய்து காண்பிப்பீர்கள். மன உறுதியோடு செயல்படுவீர்கள். நிறைய பேரிடமிருந்து பாராட்டும் புகழும் கிடைக்கும். நிறைய பாசிடிவ் எனர்ஜி உங்களுக்குள் உள்வாங்கிக் கொள்வீர்கள். சந்தோஷம் நிறைந்த இந்த தருணத்தில் குடும்பத்தோடு குலதெய்வத்திற்கு வீட்டிலிருந்த படி நன்றி தெரிவியுங்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. குறிப்பாக இரண்டு பேர் மத்தியில் போய் பஞ்சாயத்து செய்ய நிக்கவே கூடாது. உங்க மூக்கு உடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திறமைகள் வெளிப்படும். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் பாடகர்கள் இப்படி பட்டவர்களுக்கு என்று நிறைய நல்லது நடக்கும். அலுவலகத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். என்னதான் கஷ்டப்பட்டாலும் நல்ல பெயர் கிடைப்பதில் சிரமம் இருக்கும். சொந்தத்தொழிலில் நல்ல லாபம் வரும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையை சமாளிக்கும் அளவுக்கு வரவு இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன வேலைகள் கூட பெரிய மலை போல தெரியும். சுறுசுறுப்பாக எந்த வேலையும் நடக்காது. அலுவலக வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் சின்ன சின்ன திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் ஆர்வம் கொஞ்சம் குறையும். எது நடந்தாலும் பரவாயில்லை என்று ஓய்வு எடுக்க தோணும். இன்று எந்த விஷயத்திலும் அதிக ரஸ்க் எடுக்காதீங்க.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள். வரும் மனைவியை எதிர்த்து பேசாமல் இருப்பது நல்லது. நிதி நெருக்கடி உண்டாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தலைவலி வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எதையுமே ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செய்வதும், போகப்போக அந்த செயல்பாட்டில் மந்தம் வருவதையும் தவிர்க்க வேண்டும்.