மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உங்கள் முயற்சிகளில் விருப்பமான பலன்கள் கிடைக்கும். சில எதிர்ப்பாராத பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் பணிகளை நீங்கள் விரைந்து ஆற்றுவீர்கள். கொடுக்கப்பட்ட பணிகளை எளிதாக விரைவில் முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்துகொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று பணவரவு அதிகமாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நாள் சுமாராக இருக்கும். இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். முக்கிய முடிவுகளால் நற்பலன்கள் கிடைக்காது. தன்னம்பிக்கை குறைந்திருக்கும். இன்று பணியிடத்தில் வளர்ச்சி காணப்படாது. பணிகளில் தவறுகள் காரணமாக பனியின் தரம் குறையும். அதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உணர்ச்சி வசப்படுவதால் உறவில் நல்லிணக்கம் குறையும். எனவே அதனை சரி செய்து மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நிதிநிலைமை இன்று சிறப்பாக காணப்படாது. தேவையற்ற பொறுப்புகளுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். எனவே பணத்தை கையாளும்போது கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உற்சாகம் குறைந்திருக்கும். அதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியற்ற சில சூழ்நிலைகள் உருவாகும். எனவே திட்டமிட்டு அதன் படி செயலாற்ற வேண்டும். அதிகப் பணிகள் காரணமாக உங்கள் செயல் திறன் பாதிக்கும். இதனை சிறப்பாக திட்டமிடவேண்டியது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் காரணமாக உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்படும். எனவே அவருடனான வேறுபாட்டை பேசி சரி செய்து கொள்ள வேண்டும். இன்று பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது.எனவே கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு விருப்பங்களை நிறைவேற்ற்றிக்கொள்ள இயலும் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று வளர்ச்சி காணப்படும்.
பணியில் மிகுந்த திருப்தி காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் துணையுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். அவருடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்வீர்கள். உறவில் அன்பு பெருகும். உங்களிடம் உள்ள பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். இன்று அதிகம் சம்பாதிப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அமைதியின்மை காணப்படும். இன்று கவனமுடன் செயலாற்ற வேண்டும். நம்பிக்கை தரும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. பணிகளைப் பொருத்தவரை உங்களுக்கு குறைவான வாய்ப்புகளே காணப்படும். அதிக பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படும்.மகிழ்ச்சியான உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று அதக பணம் சம்பாதிக்க இயலாது. உங்களுக்கு தேவைப்படும் பணத்தை பெற இயலாது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அவநம்பிக்கை உணர்வு கானபப்டும். உங்கள் செயலில் நேர்மை அவசியம். மன அழுத்தத்தை சமாளிக்க இன்றைய நாளை அனுபவித்து மகிழுங்கள். தியானம் மேற்கொள்வது நல்லது. இன்று பணிகள் இறுக்கமாகக் காணப்படும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. உங்கள் பணியில் தாமதங்கள் காணப்படும். உங்கள் பணிகளை தொழில் சார்ந்த முறையில் செய்வதற்கு திட்டமிட வேண்டும். இன்று உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும் என்பதால் உங்கள் துணையிடம் பேசும் போது கவனம் தேவை. இன்று அதிக செலவுகள் காணப்படும். இன்று பண வரவு காணப்பட்டாலும் வளத்தை தக்க வைப்பது கடினம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்குகிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். இன்று உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். முக்கியமான செயல்களை தள்ளிப்போடுவது சிறந்தது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாத காரணத்தால் உங்கள் மனதில் கவலை ஏற்படும். இன்று எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். அதனை தவிர்த்து உங்கள் துணையிடம் நகைச்சுவை அணுகுமுறை கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். முன்னேற்றகரமான நாள். இன்று தைரியமும் உறுதியும் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்கென்று ஒரு தரத்தை நிர்ணயம் செய்து கொண்டு அதனை உங்கள் பணிகளில் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்க காண்பீர்கள். அதனை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்துவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்களுடன் தைரியமும் உறுதியும் ஏற்படும். பொதுவாக இன்று முன்னேற்றம் காணப்படும். இது உங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும். நீங்கள் இன்று புத்துணர்ச்சியுடனும் வெற்றி பெற வேண்டும் என்ற திட மனதுடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். உங்கள் துணையுடன் நல்ல தொடர்பு காணப்படும். இதனால் இருவருக்குமிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நாள் சாதரணமாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகளில் பொறுமை கடைபிடிக்க வேண்டும். கடினமான பணிகளை எளிதாக ஆற்றுவது எப்படி என்று கற்றுக் கொள்வது உதவிகரமாக இருக்கும். நீங்கள் பணியில் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். சிறு தடைகள் உங்கள் நேரத்தை வீணடிக்கலாம். திட்டமிட்டு செயல்பட்டால் சமூகமாக இருக்கும்.உங்கள் துணையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை ஒருபக்கம் தள்ளி வைத்து இருவரும் ஒரு பொதுவான முடிவுக்கு வர வேண்டும். இன்று உங்களிடம் பணம் குறைவாக காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மந்தமான நாளாக இருக்கும். இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். நேர்மறையாக சிந்தித்து மன ஆற்றலுடன் செயல்படுவது நல்லது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடனான உறவு சிறப்பாக இருக்காது. அவர்களுடன் உங்கள் அணுகுமுறையை மாற்றி சிறந்த முறையில் பழக வேண்டும். உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு முன்னேற்றகரமான நாள். இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் தகவல் தொடர்பு மூலம் நிறைய சாதிப்பீர்கள். பணியைப் பொறுத்தவரையில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் செய்வதற்கான வாய்ப்பு அல்லது வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் சீரான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் இனிமையான பேச்சின் மூலம் உங்கள் துணையின் மனதைக் கவர்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் பயனுள்ள தேவைகளுக்காக பணம் செலவு செய்வீர்கள்.