UGC புதிய விதிகளுக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றம்…!!
UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4-ம் நாள் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிரான தனித் தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பக பேசிய அவர், அரசு பொதுத்தேர்வில் என்ற பெயரில் ஒன்றிய அரசு கல்வி கற்க விடாமல் செய்வதாகவும் நீட் தேர்வு மூலம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாகவும் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னருக்கு கொடுப்பது பல்கலைக்கழகங்களை சிதைக்கும் முயற்சி என்றும் யு.ஜி.சி.யின் அறிவிப்பு கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் ஒன்றிய அரசு இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்துக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..