எதிர்பார்ப்பில் இருந்த செந்தில் பாலாஜி..!! சிக்க வைத்த அமலாக்கத்துறை..!!
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலஜி கைது செய்யப்பட்டார்.. அதன் கடந்த ஒருவருடமாக செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கியதை போல செந்தில் பாலாஜிக்கும் தீர்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய விவாதங்கள் நேற்று நடைபெற்றது.. டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கதற்கு காரணமே. மனிஷ் சிசோடியா நீண்ட காலம் அவர் சிறையில் இருந்தது தான். அது செந்தில் பாலாஜிக்கு பொருந்தாது என அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.
செந்தில் பாலஜி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதிய ரூட் ஒன்றை எடுத்திருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி செந்தில் பாலாஜியின் இந்த வழக்கில் விசாரணை முடியவடைய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு நடுநிலையான அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டால், 6 மாதத்தில் முடிக்கப்படும் என அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதாவது செந்தில் பாலாஜியின் வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது தான் அமலாக்கத்துறை பிளான் என சொல்லப்டுகிறது..
அதாவது தமிழக அரசு சார்பாக உள்ள அரசு வழக்கறிஞரை மாற்றி.. வடஇந்தியாவில் இருந்து வேறு ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்பது தான் அமலாத்துறையின் பிளான் என சூட்டிக்காட்டியுள்ளது. மேலும் மத்திய அரசு வழக்கறிஞர் ஜாமின் கோரிக்கை உள்ள நிலையில், ஜாமின் வழங்க முதலில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதத்தை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் இருந்தால் வலுவான வாதங்களை பேச முடியாது எனவே செந்தில் பாலாஜி வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என அமலாக்கத்துறை புதிய கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா பென்ச். ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது..