2வது நாளாக தொடரும் செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்க துறையினரின் வாதம் என்ன..?
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கதுறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், அவருக்கு அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு காவேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார், அதன் மீதான விசாரணையில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்தனர்.
மூன்றாவது நீதிபதியின் முன் ஆட்கொணர்வு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் கபில் சிபில் மற்றும் ஆர்.என்.இளங்கோ தங்கள் தரப்பில் பல வாதங்களை முன் வைத்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்படவில்லை என வாதாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக “குற்றம் செய்தால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை.., குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கும் அழைத்து செல்ல அமலாக்க துறையினருக்கு அதிகாரம் இல்லை.
சட்ட விரோதமாக பணபரிமாற்ற தடை சட்டத்தின் 19ன் கீழ் துணை இயக்குநர்கள்.., உதவி இயக்குநர்கள் கைது நடவடிக்கை எடுக்க கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆதாரங்கள் ஏதும் காண்பிக்கவில்லை, அதைபோல் கைது செய்ததற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கைதுக்கான காரணமும் தெரிவிக்க படவில்லை.., சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் படி அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியுமே தவிர புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது, என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே நடந்த இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. என பல வாதங்களை முன் வைத்துள்ளனர்.
வழக்கின் இரண்டாவது நாள் :
அப்போது மூத்த வழக்கறிஞர் மேத்தா அமலாக்கத்துறை சார்பாக பல்வேறு வாதங்களை முன் வைத்துள்ளார். அதில் சட்ட விரோதமான பண பரிமாற்ற தடை சட்டத்தின் படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை ஆகும்.
2000 ஆண்டுக்கு முன் நடந்த சட்ட விரோத பரிமாற்றத்தின் மூலமாக பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடும். அதனால் இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் கடமையே சட்டவிரோதமாக பணி செய்பவர்கள் மற்றும் பணபரிமாற்றம் செய்பவர்களை விசாரணை செய்வதுதான். குற்றம் செய்தவரை கண்டுபிடிப்பதற்காக சோதனைகள் செய்வது, காவலில் எடுத்து விசாரணை செய்வது பணத்தை முடக்குவது என அனைத்திற்கும் அமலாக்கதுறையினருக்கு உரிமை உள்ளது.., அது அவர்களின் கடமையும் கூட.
அமலாக்க துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் புலன் விசாரணை தான் எம்.பி, எம்.எல்.ஏ, சட்டத்தின் வரையறுக்கப்பட்ட 7 ஆண்டுகளுக்கு சிறை தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது. 2005 ம் ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் தற்போது வரை 333 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல அவர்கள் கைது நடவடிக்கையில் ஈடுபட முடியாது.
நாங்கள் புலன் விசாரணைகள் எதுவும் செய்ய முடியாது என்று மருதரப்பு வாதங்கள் ஏற்று கொண்டால்.., எம்.பி, எம்.எல்.ஏ களின் வழக்குகளில் அவர்களது சொத்துக்களை முடக்க மட்டுமே முடியும். வங்கி மோசடி வழக்கில் 19ஆயிரம் கோடி ரூபாயை அமலாக்கத்துறையினரால் மீட்டு அவர்களிடமே அளிக்கப்பட்டுள்ளது.
என பல வாதங்களை முன் வைத்துள்ளனர். சட்ட விரோதமாக செயல்பட்டால் அமலாக்கதுறை அதிகாரிகளுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை கிடைக்கும் எனவும் அவர்கள் கூறினர்..