செந்தில்பாலாஜி வழக்கு..! நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி முடிவு..?
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டிப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு…
சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.., இதற்கிடையே 2 முறை ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது…
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 6ம் தேதி வரை நீட்டிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில்.., காணொலி காட்சி வாயிலாக புழல் சிறையில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 22ம் தேதி நீட்டிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்…
இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
இதற்கிடையே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமலாக்கத்துறை அதிகாரிகள்..,
செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில்பாலாஜியின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்..,
அதே சமயம் இந்த வழக்கை ஜவ்வு மிட்டாய் போல இழுத்து கொண்டே போகாமல்., அடுத்த முறை ஜாமீன் வழங்ககோரி திமுக நிர்வாகிகள்.. கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..