41 வயதில் செம ஃபிட்..! ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னுங் போட்டோஸ்..!
நடிகை ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷ்ரேயா. இப்படத்தை தொடர்ந்து சந்தோஷம், சின்னிகேசவ ரெட்டி, நுவ்வே நுவ்வெ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தெலுங்கில் மிகவும் பிரபலமான ஷ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோவுக்கு நண்பராக ஸ்ரேயா நடித்திருப்பார் இதனால் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க தவறிவிட்டார்.
இப்படத்திற்கு பின் தமிழில் ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். சின்ன இடைவெளிக்கு பின் இரண்டு வருடம் கழித்து தமிழில் ஜெயம்ரவியுடன் மழை படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமா ஹீரோயினாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ரஜினியுடன் சிவாஜி, தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம், விஜயுடன் அழகிய தமிழ் மகன், கந்தசாமி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார்.
ஸ்ரேயா, தமிழில் கடைசியாக “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்“ திரைப்படத்தில் சிம்புவுக்கு கோடியாக நடித்திருப்பார். அதன் பின்னர் ஹிந்தி மற்றும் பிற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ஹிந்தியில் பான் இந்திய படமாக தயாரிக்கப்பட்டுள்ள கப்ஜா திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பிஸியாக இருப்பது போல் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் ஷ்ரேயா ஷேர் செய்துள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..