150 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்.. கண்ணில் தெரிந்த பவளப்பாறை.. மக்கள் அதிர்ச்சி..
இராம நாத சுவாமி கோவில் இராமேஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. தென்னகத்து காசி என்று போற்றப்படும் இக்கோவிலுக்கு ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் அங்குள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் மக்கள் புனித நீராடி முன்னோற்களுக்கு தர்பனம் கொடுத்து வருவது வழக்கம்.
சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளிகள் விடுமுறை என்பதால் இக்கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிலும் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து ராமேஷ்வரத்திற்கு வந்துள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்த நிலையி்ல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அக்னி தீர்த்தக் கடலில் நீர் மட்டம் உள்வாங்கி காணப்பட்டது.
சுமார் 150 மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியதால் பவளப்பாறைகள் வெளியில் தெரிந்ததோடு சேறும், சகதியுமாக காணப்பட்டது.
இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பக்தர்கள் நீராட முடியாமல் கடும் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது.
பின்னர் சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கடற்கரை இயல்பு நிலைக்கு மாறியது.
-பவானிகார்த்திக்