நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட இடத்தில் எஸ்சி எஸ்டி ஆணைய உறுப்பினர் ரகுபதி ஆய்வு செய்து வருகிறார். சம்பவம் நடந்த இடத்தில் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் சின்னத்துரை என்ற மாணவர் சக மாணவர்களால் கடந்த 9ஆம் தேதி இரவு அருவாளால் வெட்டப்பட்டுள்ளார். சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது தங்கை சந்திர செல்வியும் தாக்கப்பட்டார். இருவரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு எஸ்சி எஸ்டி ஆணைய உறுப்பினர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த சின்னதுரை வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்பு அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, நாங்குநேரி சின்னத்துரை தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு இச்சம்பவத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post